மதுரவாயல் பகுதியில் இரவு வீடு புகுந்து தங்கநகைகள் திருடிய நபர் கைது.
நபர் கைது. 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.
சென்னை, போரூர், காரப்பாக்கம், தர்மராஜா நகர், 7வது தெருவில்
வசிக்கும் நடராஜன், வ/70 என்பவர் 15.11.2022 அன்று இரவு மேற்படி
வீட்டில் தூங்கி மறுநாள் (16.11.2022) காலை பார்த்தபோது, கதவு
திறந்திருந்து, வீட்டில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் திருடு
போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, நடராஜன் கொடுத்த
புகாரின்பேரில், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா
பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு நபர் சம்பவத்தன்று தங்கநகைகள்
திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், சிசிடிவி கேமரா
பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில்
ஈடுபட்ட சுரேஷ், வ/31, த/பெ.சுப்ரமணி, பாரதிதாசன் நகர் 5வது குறுக்கு
தெரு, ஆலப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய 11 சவரன் தங்க நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி சுரேஷ் நள்ளிரவு அப்பகுதியில் நோட்டமிட்டு
சென்றபோது, புகார்தாரர் வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல்
தூங்கியது அறிந்து, வீட்டிற்குள் நுழைந்து, தங்க நகைகள் திருடிச்
சென்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி சுரேஷ், விசாரணைக்குப் பின்னர்
நேற்று (22.11.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற
உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
******