மதுரையில் திமுக கவுன்சிலர்களை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாரத பிரதமர் மோடி திட்டத்தில் வீடுகட்டுகின்ற ஏழைத் தொழிலாளியை மிரட்டிய 42வது மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்தை கைது செய்ய கோரி தெற்கு தொகுதி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மகா சுசீந்திரன் முன்னிலையிலும், மஹால் மண்டல் தலைவர் ஐ. பாலமுருகன் மற்றும் வைகை வடகரை மண்டல் தலைவர் அருண்பாண்டியன் தலைமையிலும் முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகில்  நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், கீரைதுறை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், பட்டியலணி மாநில செயலாளர்கள் சிவாஜி, சரவணன், 86வது மாமன்ற உறுப்பினர் ஜனா ஸ்ரீ முருகன், பெட்டிக்கடை ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் அணிதலைவி ஓம் சக்தி தனலட்சுமி, ஓ பி சி அணி மாநில பொருளாளர் மோகன் குமார், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகர் ரிஷி, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் காளீஸ் மணிகண்டன், மீனவர் அணி மாவட்ட துணைத் தலைவர் மீனா இசக்கிமுத்து, ஜெய்ஹிந்த்புரம் மண்டல் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பிரச்சார பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சதன் பாண்டியன், இரு கண்கள் ஆசிரியர் ஜி பி பாஸ்கர், IT WING மாநில செயலாளர் விஸ்வநாதன், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்காமணி, மீனவர் அணி மாவட்ட துணைத் தலைவர் அண்ணா பஸ் ஸ்டாண்ட் முரளி, 41 வது வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, மாவட்ட ஊடகபிரிவு காரல் மார்க்ஸ், பரமசிவம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு‌ பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *