தூத்துக்குடியில் மீன்வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
![]()
தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது தொடர்பாக கண்காணிக்கும் பொருட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மேலாண்மை உதவி இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில், மீன்வளத்துறைக்கு சொந்தமான படகில், கடலோர அமலாக்க பிரிவு காவலர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொண்டனர்.கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு வல்லத்தை பிடித்து முயல் தீவு கடற்கரைக்கு கொண்டு வந்து, அந்தப் படகையும், படகில் இருந்த மீன்களையும், மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்திய வலைகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் முடிவில், மேற்படி வல்லம், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தவில்லை என தெரிய வந்ததன் பேரில் நடவடிக்கை ஏதுமின்றி மேற்படி வல்லம் விடுவிக்கப்பட்டது.

