முரசொலி மாறனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை
கோவையில் மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் பசுபதி, துணைச் செயலாளர் குட்டி என்கிற கார்த்திக், பகுதி கழக தலைவர் சந்திரன், மாவட்ட பிரதிநிதி தேவசீலன், பிரின்ஸ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.