கன்னியாகுமரியில் 150 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் :- சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடற்கரை சாலையில் 150 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக தெருவோர வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நேரத்தில் கடற்கரை சாலையில் தெரு வியாபாரிகள் வியாபாரம் செய்யக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 150 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் முறையிட்டும் அனுமதி வழங்கவில்லை. இந்த தொழிலை நம்பி வாழும் தங்கள் குடும்பத்தின் நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி உருட்டு வண்டி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குமரி கடற்கரை சாலையில் தெரு வியாபாரம் செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்தனர்….