சாகனா யோகா மையத்தின் உலக சாதனை நிகழ்வு

Loading

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற,
புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு குறித்து தொடர்ச்சியாக  4 மணி நேரம் சந்திரன்நமஸ்காரம் செய்து மாணவர்கள் உலக சாதனை செய்தனர்.
சகானாஸின் புதிய உலக சாதனைக்காக  சகனா யோகா மையத்தின் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சந்திரன்மஸ்காரம் செய்து புவி வெப்பமயமாதல்  குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கினார்கள்.மேலும்  பல்வேறு வகையான ஆசனங்களையும் செய்தனர்,சுமார் 45 நிமிடங்கள் மாணவர்கள் மீன் தொட்டிக்குள் அமர்ந்து மகமித்ரம், மற்றும் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து  ராஜக புட்சம், செங்கல்களை அடுக்கி அதற்கு மேல் உட்காந்து  நகு ஏக தண்டாசனம்,  பரிகாசனம், முழு அங்க சிரஸ் சாசனம் போன்றவையும் மாணவர்கள் செய்து காட்டினர் .
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் திமுக MP T.K.S.இளங்கோவன்,  நக்கீரன்கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்,
சிறப்பு விருந்தினர்களான டி கே எஸ் இளங்கோவன் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் குழந்தைகளின் யோகாசன சாகசத்தை வியப்புடன்  பார்த்து ரசித்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்த்திய (சகானா )யோகா மையத்தின்  மாணவர்களுக்கு, குளபல் வேர்ல்ட் ரெக்கர்ட் மூலம்  சான்றிதழ்களும், கேடயமும் வழங்கபட்டது.
அதை தொடர்ந்து பேசியவர் கள்
மாணவர்கள் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சந்திரன்மஸ்காரம் செய்து புவி வெப்பமயமாதல்  குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கினார்கள்
வயது வரம்பு இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த உலக சாதனை நிகழ்த்திய (சகானா )யோகா மையத்தின்  மாணவர்களுக்கும் குழு சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
இந்த பயிற்சியின் மேற்கொள்வதன் மூலம் அனைத்து வகையான திறன் வளம் மேம்படும், மன அழுத்தம் குறையும் எனவும் கூறினார்
0Shares

Leave a Reply