மூல நோய் பற்றி விழிப்புணர்வு
மூல நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரைம் இந்தியன் மருத்துவமனை
இந்திய குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
மற்றும் தமிழ் நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
சார்பில் நடைப்பெற்ற மாராத்தான் போட்டியில் வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பங்கேற்பு
உலக மூல நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைப்பெற்ற மாராத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலக மூல நோய் தினத்தையொட்டி சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மினி மாராத்தான் நடைப்பெற்றது.
இதில் மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுதுரைக்கப்பட்டன.இந்த விழிப்புணர்வு மினி மாராத்தான் நிகழ்ச்சியை எம் பி கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மூலம் வராமல் தடுப்போம் உடல் நலன் காப்போம்,உடல் பருமனை தடுப்போம் மூலம் வராமல் தடுப்போம் போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதனை தொடர்ந்து எம் பி கலாநிதி வீராசாமி பேசியபோது,
மூல நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த புரிதல் பலருக்கு இல்லை, தெரியாமல் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் இரத்த சோகை நோய் கூட வரலாம்.
முதலில் கண்டுக்கொண்டால் இதற்கான மருத்துவ முறை சுலபமாக இருக்கும் ஆண்களும் சரி பெண்களும் சரி மலம் கழிக்கும் போது கவனிக்க வேண்டும் நோய் பாதிப்பு பெரிதாக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்து தயக்கம் இல்லாமல் மருத்துவர்களிடம் ஆலோசித்து இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர்கள், மூல நோய் எதனால் ஏற்படுகிறது, அப்படி முல நோய் வந்தால் அதற்கான சிகிச்சை என்ன? எப்படி இந்த நோய் வராமல் தடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதிக நீர் உட்கொண்டு நார் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், உடற்பயிற்சி , நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாழ்ககை
முறையில் மாறுபாடு ஏற்ப்படுத்தி முறையாக செயல்பட வேண்டும் என்றனர்.
டாக்டர் கிருஷ்ணாராவ் , பிரம் இந்தியன் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் கண்ணன் , டாக்டர் ரவிக்குமார், ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…