* சிவகங்கை மாவட்டம் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி*

Loading

சிவகங்கை மாவட்ட அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டியானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகங்கை சீமை இணைந்து புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகங்கையில் நடைபெற்றது. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிகளில் இளநிலை உயர்நிலை மேல்நிலை பிரிவுகளில் அறிவியல் வினாடி வினா போட்டிகளை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். போட்டியின் நடுவர்களாக செந்தில்குமார், பிரான்சிஸ் சேவியர், பிரபாகரன், சின்னப்பராஜ், தனுஷ் ஸ்டாலின் ஜெயபாலன் ஸ்டாலின், கௌரி, விஜயராஜ் சிறப்பாக செயலாற்றினார்கள். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட தலைவர் முனைவர் கோபிநாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டப் பொருளாளர் ரகுநாதன், ரோட்டரி கிளப் ஆப் சிவகங்கை சீமையின் பட்டயத் தலைவர் சம்பத், தலைவர் கலைக்கண்ணன் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட கௌரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் நோக்க உரையாற்றினர். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள், புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் சேவற்கொடியோன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலாளர் ஆரோக்கியமேரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணவாளன், பள்ளியின் துணை முதல்வர் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ் வழியில் இளநிலை பிரிவில் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி தேவகோட்டை முதல் இடத்தையும், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம் இரண்டாம் இடத்தையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கழுவன்குளம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தமிழ் வழி உயர்நிலைப் பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி முப்பையூர் முதலிடத்தையும், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம் இரண்டாம் இடத்தையும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தமிழ் வழி மேல்நிலைப் பிரிவில் என். எஸ். எம். பி. பி. எஸ்
மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை முதல் இடத்தையும், தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை இரண்டாம் இடத்தையும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஆங்கில வழி இளநிலை பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி இலுப்பைகுடி முதல் இடத்தையும், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம் இரண்டாம் இடத்தையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ராஜகம்பீரம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஆங்கில வழி உயர்நிலைப் பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காளையார்கோவில் முதல் இடத்தையும், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம் இரண்டாம் இடத்தையும் மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஆங்கில வழி மேல்நிலை பிரிவில் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம் முதலிடத்தையும், மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி காரைக்குடி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. சிவகங்கை கிளை செயலாளர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தெற்கு மண்டல அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டியில் நடைபெறக்கூடிய மண்டல போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *