நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா

Loading

எதுவும் செய்யாத நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் – நடிகை பிரியங்கா சோப்ரா
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மல்டி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ” நடிகர், நடிகைகள் செய்வதெல்லாம் யாரோ ஒருவரின் வசனங்களைப் பேசுவதும் பிறர் குரலில் உதடுகளை அசைப்பதும்தான். அவர்கள் ஆடும் நடனம் கூட பிறர் ஆடிகாட்டுவது தான். சினிமாவில் அவர்களின் வேலை மிகக் குறைவு. எதுவும் செய்யாத அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றும்போதுதான் சிறந்த நடிப்பைக் கற்றுக்கொள்ள முடியும். நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *