சாதனை மாணவிகளை பாராட்டிய தலைமை ஆசிரியர்.

Loading

தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்
தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான ஜீனீயர் குண்டு எறிதல் போட்டியிலும், ஹாக்கி சூப்பர் சீனியர் பிரிவிலும் முதலிடம் பெற்று அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளையும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் தீபா, உடற்கல்வி ஆசிரியர்கள் கவிதா, சாராதாமணி, வெங்கடேசன் ஆகியோர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் கலைச்செல்வி, உதவி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply