டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் கேட்டு கரூர் கம்பெனி என்னும் அடைமொழியில் விரட்டி வரும் கும்பல்களின் அராஜகத்தை கண்டித்து தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க கோரி மாநிலச் செயலாளர் தோழர் கி. முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் தோழர் வி.மணி வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலாளர் முகமது அலி, சேலம் மாவட்ட செயலாளர் முருகேசன், சேலம் மாவட்ட தலைவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் மாநில தலைவர் கு.சரவணன் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். மேலாள் மாநில பொதுச் செயலாளர் ப.பெரியசாமி வாழ்த்துரையாற்றினார்.மேலும் இதில் மாவட்ட செயல் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ரங்கசாமி, மாவட்ட அமைப்புச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட இணை செயலாளர் மாது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் ராமன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் தோழர் வி.ராஜா நன்றியுரை ஆற்றினர்.