(MBC) இட ஒதுக்கீட்டை தட்டிப் பறிப்பது கேள்விக்குறியாக இருக்கிறது
புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள காவல் துறை உதவி ஆய்வாளர் , தீயணைப்புத் துறை, ஓட்டுநர் , புள்ளியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் , போன்ற அரசு பணி தேர்வில் இட ஒதுக்கீட்டை வழங்காதது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு அநிதியாகும் என்று புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கோ.கணபதி குற்றச்சாட்டு.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் போராடி பெற்றுக் கொடுத்த (MBC) இட ஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
புதுச்சேரியில் பரபரப்பு அனைத்து பணிகளிலும் MBC க்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி அணி திரண்டு போலீஸ் தடுப்பு சுவரை மீறி சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டனர்.