உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசங்கரி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு சர்க்கரை நோயினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும், அரிசி உணவுகளை குறைத்து காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவும், வெள்ளை சர்க்கரை, மைதா, சூரியகாந்தி எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை தவிர்த்து விடவும் வலியுறுத்தினார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் கருப்பு மூக்கு கடலை சுண்டல் வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *