வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
![]()
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் மழைக்காலங்களில் சாலையின் தாழ்வான பகுதியில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிரது என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் சாலையை சீரமைக்க வேண்டும் என செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.அதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக பணியாக சாலையில் தாழ்வான பள்ளங்களில் மழைநீரை அகற்றி கான்கிரிட் கொட்டபட்டு பணி செய்தனர்.சாலையை முற்றிலும் சீரமைக்காமல் தற்காலிக பணி செய்தது பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு அதிப்ருதி ஏற்படுதியுள்ளது.அடுத்த இருதினங்களின் கனமழைக்கு இந்த தற்காலிக பணி பயணளிக்குமா என பொதுமக்கள்,வாகனஓட்டிகள் அதிப்ருதியை தெரிவித்தனர்.

