சந்திர கிரகணத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்கள் நடை அடைப்பு… பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :-

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது.அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தவகையில், நேற்று  முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. மத நம்பிக்கைகளின்படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் கிரகணம் நிகழும் வேளையில் பல்வேறு கோயில்களின் நடை அடைக்கபடுவது வழக்கம் . இந்நிலையில், சந்திர கிரகணம் நிகழும் வேளையில் பல்வேறு கோயில்களின் நடை அடைப்படுவதாக அனைத்து  கோவில் நிர்வாகங்கள்  ஏற்கனவே அறிவுப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் ,சுசீந்திரம் தானுமாலையன் கோவில்,  நாகராஜா கோவிலில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள கோவில்களும்  பகல் 12:30  மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதை எடுத்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இரவு 6:30 மணிக்கு பிறகு நடை திறக்கப்பட்டு மூலவர்க்கு அபிஷேகங்கள் மற்றும்  பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின் மீண்டும் கோவில் நடை  திறக்கபட்டு பக்தர்களுக்கு   சாமிதரிசனத்திற்க்கு அனுமதி வழங்கப்பட்டது….

0Shares

Leave a Reply