வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில்,
வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு,
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் குன்னூர் வட்டத்தில் உள்ள எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பேரிடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், முதியோர் இல்லம் ஆகியவற்றை தணிக்கை மேற்கொண்டனர். மேலும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவியர்
களுக்கான,
பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் ,
துணை வட்டாட்சியர் நந்தகோபால்,
வருவாய் ஆய்வாளர் லலிதா , கிராம நிர்வாக அலுவலர்கள் தீபக், மனோ பாலா, சுரேஷ், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்