இந்தாண்டும் காயாரோகணேசுவரருக்கு  அன்னாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

Loading

சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி கிழக்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள காயாரோகணேசுவரா் சுவாமி சன்னதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அருள்மிகு காயாரோகணேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்தாண்டும் காயாரோகணேசுவரருக்கு  அன்னாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்த அன்னாபிஷேகத்தின் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும்,நீர்நிலைகள் நிரம்பவும்,விவசாயம் செழிக்கவும் காயாரோகணேசுவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகள் செய்யபட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனையடுத்து அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு  அன்னத்தை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்ப்பட்டது.
0Shares

Leave a Reply