புதுச்சேரி மாநில சுகாதார ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி சட்டசபை அருகில் உள்ள அலுவலக ஊழியர்கள் கிராமப்புற செவிலியர்கள் அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் N.H.M. அலுவலக ஊழியர்களுக்கு போட வேண்டிய 10,000 க்கான கோப்பினை தயார் செய்து வழங்க வேண்டும்.
எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமே மத்திய அரசால் அரசாணை வெளியிட்டும் எங்களுக்கு இன்று வரை சுகாதாரத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய 5% ஊதிய உயர்வை வழங்க வலியுறுத்தியும் 6வது நாளாக இந்த தொடர் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.