இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்
ஆடம்பரச் செலவுகள் செய்யாதீர்கள். சிக்கனமாக இருந்தால் கடன்களைச் சமாளிக்க முடியும். வேலையிடத்தில் உணர்ச்சிவசப்படாதீர். வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாக நடத்துங்கள். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையாக இருங்கள். மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலை அமைந்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது.

ரிஷபம்
எவ்வளவுதான் பக்குவமாக நடந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்கள் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருங்கள். வியாபாரம் சரிவாக நடக்கும். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலைச் சுணக்கம் ஏற்படும். கடன் சுமை அதிகரிக்கும்.

மிதுனம்
அனைத்துவிதமான குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நவீனமான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற நெருக்கடி ஏற்படாது. இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்
வியாபாரம் செழிப்பாக நடக்கும். பங்குச்சந்தையில் நல்ல வருமானம் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நண்பர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி ஓடும். பெரியோர்களின் ஆதரவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உங்கள் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்புக் கிடைக்கும்.

சிம்மம்
சக ஊழியர்களுடன் அணுக்கமாக நடந்துகொள்ளுங்கள். எவ்வளவு வேலை செய்தாலும் முதலாளிகள் திருப்தி அடையமாட்டார்கள். ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கூட இருந்தே குழி பறிக்கும் கூட்டம் உங்களைச் சுற்றி உள்ளது. அடையாளம் கண்டு ஒதுங்குங்கள். வேலை சம்பந்தமாக அலைச்சல் அதிகமாகும். வேளை தவறாமல் சாப்பிடுங்கள்.

கன்னி
வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழிலை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்வீர்கள். அதில் கவனம் தேவை. நட்புகளை ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். தேவையில்லாத கெட்ட பெயர் உண்டாகலாம். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் மனச் சங்கடம் அடைவீர்கள். பொருளாதார நெருக்கடியால் சில முக்கிய காரியங்களில் தடைகள் உண்டாகும்.

துலாம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவரைப் பாருங்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். தடைப்பட்டுப் போன திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோக லாபத்தைக் கொடுக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளியூரிலிருந்து வரும் செய்திகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால், கடுமையாக உழைக்க வேண்டும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகம் ஏற்படும்.வாழ்க்கைத் துணை அடுத்தவர்களின் பேச்சை கேட்பதால் நீங்கள் அவஸ்தைப்படுவீர்கள். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ஆடல், பாடல் என்று பொழுதுபோக்கு அம்சங்களில் மனதைச் செலுத்துவீர்கள்.

தனுசு
பிரச்சனையில் இருந்து விலக நினைத்தாலும் பிரச்சனை உங்களை விடாது. வியாபார ஒப்பந்தம் போடும்போது பத்திரங்களை நன்றாக படித்துப் பாருங்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். பணப்புழக்கம் சற்று சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்
மாணவர்கள் அக்கறையோடு படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் வரும். விவசாயத் தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு நடந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களைக் கொண்டு வருவீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும்.

கும்பம்
கடன்களை அடைத்து சமுதாயத்தில் நிம்மதியான நிலையைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும். கூட்டாளிகள் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிட்டும். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையைப் பார்ப்பீர்கள்.

மீனம்
வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு கொள்ளை லாபம் பார்ப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு தொழிலுக்கு பக்கபலமாக அமையும். நெருக்கடிகள் இருந்தாலும் ஊழியர்களுக்கு வேலைப்பளு குறையும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிக்கனமாக இருந்து சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *