கதாநாயகர்களை விட கதையே உயர்ந்தது – நடிகை அனு இம்மானுவேல்
கதாநாயகர்களை விட கதையே உயர்ந்தது என சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சினிமா அனுபவங்கள் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், “நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும்.
நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தாலும் நடிகையாக மட்டும் எப்போதும் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சினிமா துறையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ரசிகர்களுக்கு ஹீரோ யார் என்ற விஷயத்தை விட கதைதான் உயர்வாக இருக்கிறது. அவர்கள் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது சில படங்களின் வெற்றியை பார்த்த பிறகு தெரிந்தது.
நடிகையாக நானும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். எனக்கு ஏற்ற நல்ல கதை, கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் வீட்டில் சும்மா வேண்டுமானாலும் இருந்து விடுவேன். படத்தின் வெற்றி என்பது என் கையில் இல்லை” என்றார்.