திருத்தணி அருகே பெண் கேட்டு தர மறுத்ததால் கடைக்கு தாயுடன் வந்த பெண்ணை கடத்திய 2 பேரை 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்

Loading

திருவள்ளூர் நவ 07 :
திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த சேகரின் மனைவி மஞ்சுளா மற்றும்  மகள் ஷியாமளா ஆகிய இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது, வழி மடக்கிய 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை கீழே இறக்கி அங்கே ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த அம்பாசிடர் காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மஞ்சுளா கூச்சலிடவே அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளிப்பட்டு போலீசாருக்கு  தகவல் கொடுத்ததுடன் காரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர். கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று  தமிழக -ஆந்திர மாநில எல்லையோரப் பகுதியான பொதனப்பள்ளி அருகே காரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அத்திமாஞ்சேரி பேட்டையைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  மெக்கானிக்கான ஜெயக்குமார் என்பவருக்கு ஷியாமளாவை பெண் கேட்டு சென்றதாகவும், ஆனால் பெண் தர மறுத்ததால் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து பெண்ணை கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஜெயக்குமார், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெண் கேட்டு தர மறுத்ததால் பெண்ணை காரில் கடத்தியதும், அவர்களை 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *