ஸ்ரீசேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள ஸ்ரீசேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் 2022 – சேலம் நான்காவது அத்தியாயத்தை எடுத்து நடத்துகிறது. இந்நிகழ்வானது இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கேரள உயர்கல்வி கவுன்சில் முன்னாள் செயல் தலைவர் மற்றும் இந்தியாவின் ஐக்கிய நாடுகளின் சபையின் நிரந்தரப் பிரதிநிதியுமாகிய ஸ்ரீனிவாசன், கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
சேஷாஸ் ஐ.ஐ.எம்.யு.என் – உலகளாகிய மனப்பான்மையை ஒவ்வொரு இந்தியனும் பெறவும் வளர்ச்சி அடையவும் செய்வதே இதன் நோக்கமாகும்.இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகளில் இந்தியாவின் பண்பாடுகள், மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி தங்கள் செயல்களில் உலகளவில் நிலைநிறுத்த சேஷாஸ் ஐ.ஐ.எம்.யு.என் இந்திய கொடியை ஏற்பதில் பெருமை கொள்கிறது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தனது உரையில், ஐக்கிய நாடுகள் தனது அளப்பரிய பங்களிப்பை இவ்வுலகிற்கு வழங்கி வருவதாகவும்,உலகின் 193 நாடுகள் ஒருங்கிணைந்து உலகின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகின்றன என்பதையும் கூறினார்.மேலும், ஐக்கிய நாடுகளின் மாதிரி சபை ஏற்படுத்த காரணம் 193 நாடுகளுக்கான வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் உணர்த்துவதற்கே ஆகும்.இதன் மூலமாக இளம் வயதினருக்கு நல்லதொரு அனுபவம் மற்றும் உள்ளாற்றலை வெளிப்படுத்துவதற்கும் ஒவ்வொரு பிரதிநிதியாளர்களுக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவும்,போட்டியை நம்பகத்தன்மையுடையதாகவும் நடத்துவீர்கள் என நம்புகிறோம். உங்கள் பங்களிப்பை காணும் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு உங்கள் அளப்பரிய பங்களிப்பை அளிப்பீர்கள் என தெளிவாக தெரிகிறது என தனது சிறப்புரையில் கூறினார்.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.கருத்தரங்கு முடிவில் சிறந்த பேச்சாளாருக்கான விருது வழங்கப்பட்டு மும்பையில் நடைபெற உள்ள ஐ.ஐ.எம்.யு.என். சர்வதேச சாம்பியன்ஷிப் கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஸ்ரீசேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் தலைவர், தாளாளர்,முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.