ஈரோடில் “வக்ஃபு வாரிய” தலைவருக்கு வரவேற்பு.!
![]()
ஈரோடு நவம்பர் 4
ஈரோட்டில் உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு வக்ஃபு வாரிய தலைவர் பங்கேற்றதால் அவரை ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வரவேற்பு கொடுத்தனர்
ஈரோடு மாவட்ட சார்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,ஈரோடு மாநகரின் மூத்த தலைவர் முத்து பாவா அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்டத் தலைவர் நூர்சேட், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிர சிறுபான்மை துறை துணை தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் ஆகியோர் வரவேற்று மகிழ்ந்தனர்.

