திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டிலும் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் : 2-வது வார்டில் திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்பு

Loading

திருவள்ளூர் நவ 04 : தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்தார் நகராட்சி பேரூராட்சி ,மாநகராட்சி, மற்றும் பகுதி சபை  கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்று அறிவித்தார். அதன் பேரில் ஒவ்வொரு மாநகராட்சிகள், நகராட்சிகளிலும் வார்டுகள் தோறும் பகுதிகளாக வரையறை செய்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 4 சபா உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வார்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த சபா உறுப்பினர்களுக்கு அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் தலைவராக செயல்படுவார்கள். அதோடு 3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் நடத்தி அதில் திட்டப்பணிகள் குறித்து முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி அதை அந்தந்த நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  அதனையடுத்து நவம்பர் 1-ந் தேதியான நேற்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.  அதன் படி திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றது.

அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் நடைபெற்ற வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினரும், நகர்மன்றத்தலைவருமான பா.உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். பகுதி சபா உறுப்பினர்கள் எம்.பாலச்சந்தர், பி.ராஜிவ், எம்.துரை முருகன், என்.மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, நகர் மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்.

இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.  பொதுமக்களின் கோரிக்கைகளான இடுகாட்டில் தண்ணீர் குழாய் அமைத்தல், புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பேசும் போது, தெருவிளக்கு குடிநீர் குழாய் சாலை குடி தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு குறைகள் இருந்தால் அதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து செய்து தரப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.அதைத் தொடர்ந்து 50 க்கும் மேற்ப்பட்ட திருவள்ளூர்  நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை வழங்கி பருவமழை தொடங்கியுள்ள காலகட்டத்தில் தற்போது நகராட்சி ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி நடைபெற்று வரும் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து பொதுமக்களிடத்திலும் நற்பெயர் எடுத்து சிறப்பாக பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.  இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply