மூழ்கிய தரைப்பாலத்தால் சேற்றுப் புண்ணால் மாணவர்கள் அவதி .

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தையொட்டி புதிய ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ரெட்டியூர் -சமத்துவபுரம் இனைக்கும் பகுதியில் தரைப்பாலம் அமைக்கபட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 6 மாதங்களாக மழை நீர் 3 அடி உயரத்திற்க்கு தேங்கி நிற்கிறது.
மேலும் சமத்துவபுரம், விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் மழை நீரானது இப்பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக காலை மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தண்ணீரில் நடந்து சென்று வருவதால் கால்களில் சேற்றுப் புண் ஏற்பட்டு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் வயதானவர்கள், கால்நடைகள், வண்டி வாகனங்கள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சாலை அமைக்கும் ஒப்பந்ததாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *