வல்லபாய் பட்டேல்,இந்திரா காந்தி ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டு 3வது சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.மூர்த்தி வரவேற்புரையாற்றினார்

Loading

சென்னை பழையவண்ணாரப்பேட்டை சர் தியாகராயா மெட்ரோ நிலையம் அருகில் ராஜீவ் நட்பகம் சார்பில் அன்னை இந்திராகாந்தி நினைவு தினம்,இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கெனரா வங்கியின் பணியாளர் ஜெய்சங்கர் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்தும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
மாநில பொதுச் செயலாளர் க.இராமலிங்க ஜோதி  தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.இதனையடுத்து ராஜீவ் நட்பகத்திற்கென புதிதாக வாங்கப்பட்ட ஒலி பெருக்கியினை முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே.பாபு சுந்தரம் நிகழ்ச்சி பயண்பாட்டிற்க்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வல்லபாய் பட்டேல்,இந்திரா காந்தி ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டு 3வது சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.மூர்த்தி வரவேற்புரையாற்றினார்.இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான்,மனித உரிமை துறை முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.அப்துல் சமது,வர்த்தக பிரிவின் மாவட்ட தலைவர் வே.உமாபதி,வட்டத் தலைவர் வி.கே.செல்வராஜ்,துறைமுகம் பகுதியை சேர்ந்த மண்ணடி மணவாளன்,திருவொற்றியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.கலைமணி,ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார்,பி.முனியன்,டி.ஆனந்தராஜ், எம்.ஏழுமலை, ஏ.காஜாமுகிதின், எம்.ஜெகதீசன், பி.எம்.சேகரன் உள்ளிட்டோர் பலர் தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நிகழ்வின் இறுதியில்”பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி” மேற்கொள்ளப் பட்டது. அப்போது,”தீவிரவாதம், பயங்கரவாதம்,எந்த ரூபத்தில் வந்தாலும் அன்னை இந்திரா காந்தி வழியில் உயிர் கொடுத்தேனும் தடுத்து நின்று,இந்தியாவின் ஒற்றுமை,ஒருமைப்பாட்டை காப்போம்”என்று அனைவரும்  உறுதிமொழிகளை ஏற்றனர்.நிகழ்சி நிறைவில் எஸ்.அன்பழகன் நன்றிவுரையாற்றினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *