இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
மனத் துணிவோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற வேட்கையோடு வேலை செய்வீர்கள். அவசரமான காரியங்களுக்கு கடந்தகால சேமிப்பு கை கொடுக்கும். குடும்பத்தினர் உங்களுடைய குணத்திற்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்கள். பங்கு பரிவர்த்தனை வியாபாரம் செழிப்பாக இருக்கும். பணவரவில் தடையில்லை.
ரிஷபம்
சின்னச் சின்ன சங்கடங்களால் மனம் சஞ்சலம் அடையும். திட்டமிட்டு காரியம் செய்தாலும் இடையூறு வரும். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். தொழிலுக்கு வேண்டிய நிதி உதவியை தந்தையார் செய்வார். வெளியூர்ப் பயணங்களால் வெற்றி உண்டாகும்.
மிதுனம்
ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் குற்றம் காண்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்க பல தடைகளைத் தாண்டுவீர்கள். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசு அதிகாரிகள் பைல்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக செலவுகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.
கடகம்
நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணை மணம் முடிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். உறவுகளில் இருந்த மனச் சங்கடங்கள் மறைந்து போகும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் கேட்ட உதவி கிடைக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். கலைத்துறையினர் முத்திரை பதிப்பார்கள்.
சிம்மம்
உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரிடம் சொந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வெப்பச் சலனத்தால் உடல் பாதிப்பு உண்டாகும். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள்.
கன்னி
உங்கள் பெருந்தன்மையால் உறவுகளுக்குள் இருந்த பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணம், கேட்ட இடத்தில் கிடைக்கும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். வீட்டில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உற்சாகமாக இருப்பீர்கள். ஆன் லைன் வர்த்தகங்கள் சிறப்பாக நடக்கும். பழைய கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள்.
துலாம்
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் உங்கள் திறமையை அதிகரித்து பாராட்டுப் பெறுவீர்கள். உங்களின் அன்பைப் புரிந்து கொண்டு பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். தொழிலுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் சுலபமாகக் கிடைக்கும். பண வரவால் மன நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம்
நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு முழுமையான பலனை அனுபவிப்பீர்கள். வேண்டாம் என்று எட்டிப் போனவர்கள் ஓட்டி வருவார்கள். வாடிக்கையாளர்களை வசீகரப் பேச்சால் கவர்ந்து இழுத்து லாபம் அடைவீர்கள். அரசு ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய காண்ட்ராக்டர்கள் கிடைக்கும். கட்டிட வேலைகள் சுணக்கம் இன்றி நடக்கும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அனைவரையும் வசப்படுத்துவீர்கள். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றம் பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் அணுக்கமாக வேலை செய்வார்கள். அதனால் சம்பள உயர்வு கிடைக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த, பணி மாறுதல் ஏற்படும். ஓவர் டைம் பார்த்து அதிகச் சம்பளம் பெறுவீர்கள். வியாபாரத்தில் தனி முத்திரை பதிப்பீர்கள்.
மகரம்
வியாபார நிமித்தமாகச் செல்லும் வெளியூர்ப் பயணங்களில் அதிகப் பலன் கிடைக்காது. வாகனங்களைப் பழுது பார்க்க வேண்டிய நிலை உருவாகும். தொழிலை மேம்படுத்த அதிக முதலீடு செய்வீர்கள். பணிச்சுமை காரணமாக மனச்சோர்வு உண்டாகும். யாரிடமும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அவமானம் அடையாதீர்கள்.
கும்பம்
ஓயாத உழைப்பால் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் மனைவி ஏறுக்கு மாறாக நடப்பார். குடும்பக் குழப்பத்தை சரி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள். அதனால் கடன் சுமை அதிகரித்து கஷ்டப்படுவீர்கள். பங்குப் பரிவர்த்தனை லாபம் தராது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக நடக்கும். மனக்கவலை அதிகரிக்கும்.
மீனம்
வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய பணம் தடையில்லாமல் வந்து சேரும். நில விற்பனையின் மூலம் நல்ல தொகை கிடைக்கும். பிள்ளைகள் நலனுக்காக அதை சேமிப்பீர்கள். வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வீடு கட்ட திட்டமிடுவீர்கள். அரசு வேலையில் அயர்ச்சி இன்றி உழைப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் வெற்றி பெற்று பெற்றோரைப் பெருமைப் படுத்துவார்கள்.