எனக்காக மாப்பிள்ளையை தேர்வு செய்ததற்கு நன்றி- வர்ஷா பொல்லம்மா கிண்டல்
தமிழில், ‘வெற்றிவேல்’, ‘யானும் தீயவன்’, ‘பிகில்’, ‘செல்ஃபி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் வர்ஷா பொல்லம்மா. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்குத் தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலித்து வருவதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வைரலானது.
அதை டேக் செய்து மறுத்துள்ள வர்ஷா, இது முற்றிலும் பொய்யான செய்தி என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘எனக்கான மாப்பிள்ளையைத் தேர்வு செய்ததற்கு நன்றி. அவர் யார் என்று சொன்னால், என் குடும்பத்தாரிடம் பேச வசதியாக இருக்கும்’ என்று கிண்டலாக கேட்டுள்ளார்.