சேலத்தில் எட்டு அணிகள் பங்கேற்ற தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

Loading

சேலத்தில் எட்டு அணிகள் பங்கேற்ற தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
கிராம புற இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டி சேலம் உடையாப்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக விழாவில் உரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன், 130 கோடி மக்கள் தொகையில் 100 மக்கள் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். அந்த அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டு மாறியுள்ளது. தொழிற்சாலைகள், பள்ளிகள் தொடங்குவது போல் விளையாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்பட வேண்டும். கிராம்ப்புறங்களில் இளைஞர்களை கிரிக்கெட் வீரர்களாக ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு மன உறுதியும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கும் இருக்க வேண்டும். கொரோனா பேரிடருக்கு பின்பு பெரும்பாலானோரின் கவனம் விளையாட்டு துறையின் மீது சென்றுள்ளது. அதன் அடிப்படையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் தமிழக முதலமைச்சர் ரூபாய் 36 கோடி பரிசுத்தொகையாக வழங்கியுள்ளார்.
குஜ்ராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழக வீர்ரகள் 300 க்கும் மேற்பம்டோர் பங்கேற்று 75 பதக்கங்களை வென்று இந்திய அளவில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. விரைவில் தமிழகம் விளையாட்டு தலைநகராக மாறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பந்து வீச பேட்டிங் செய்தும், பந்து வீசியும் வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *