வருங்காலங்களில் முழு அரசியலில் ஈடுபட போகிறேன் – நடிகை நமீதா

Loading

2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். நமீதா பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார்.

இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், இவர் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமீதா, தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply