இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
புதிய பொறுப்புகள் வந்து சேரும். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
ரிஷபம்
கவனமாக நடக்காவிட்டால் கையிருப்பு கரைந்து போகும். எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். சந்திராஷ்டமம் நாள். எதிலும் நிதானம் தேவை.
மிதுனம்
பழைய கடன்களைச் சுலபமாக பைசல் செய்வீர்கள். இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கை உண்டாகும்.
கடகம்
சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் நடக்கும். சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்கள் கூடி வரும். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம்
வேலை இடங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.
கன்னி
இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்கத் தொடங்கும். உண்மையான நட்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூர்ப் பயணங்கள் தொழிலுக்குச் சாதகமாக அமையும்.
துலாம்
பணியிடத்தில் உங்கள் பொறுமைக்குப் பரிசாக உயர்வு வந்துசேரும். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுங்கள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு இருங்கள்.
விருச்சிகம்
தோல்வியில் துவண்டு இருந்த உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு
வங்கியில் எதிர்பார்த்த கடன் சம்பந்தப்பட்ட விவரங்கள் இழுபறியாக இருக்கும். தொழில் வரியை முறையாக செலுத்தி விடுங்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.
மகரம்
சட்டத்திற்குப் புறம்பான நிலங்களை வாங்க வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரம் பாதகமாக இருக்கும். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகை வந்து சேரும்.
கும்பம்
பேச்சுவார்த்தை மூலமாக பெரிய சாதனை புரிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள்.
மீனம்
இரக்க சிந்தனையோடு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.