நீலகிரி மாவட்டம் குன்னூரில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்
குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நீலகிரி மாவட்ட பார்வை இழந்தோர் மற்றும் தடுப்பு சங்கம் யூத் ரெட் கிராஸ் மற்றும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகமை மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர்
கா. ராமச்சந்திரன் அவர்கள் துவங்கி வைத்தார்.கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி முனைவர் ஷீலா, பிரகாஷ் சேர்மன் கேப்டன் மணி குன்னூர் ரெட் கிராஸ் செயலாளர் டாக்டர் பிரபு குமார், மோரிஸ் சாந்த குரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் பேசும்போது தமிழகத்தில் நாம் முதல்வர் என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதன் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்இத்திட்டத்தின் கீழ் ஏழை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப படித்து முன்வர அரசு முழுமையாக ஒத்துழைப்பு தந்து அவர்களுக்கு உறுதுணையாக உதவி செய்து வருகிறதுமாணவ மாணவிகளுக்கு இலவச உணவு கல்வி கட்டணம் ஆகியவற்ற அரசே பார்த்துக் கொள்கிறதுஅதைப்பற்றியும் எண்ணாமல் மாணவிகள் படிப்பை மட்டும் நன்றாக படித்து முன் வர வேண்டும் நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும், கூட்டுறவு பண்டக சாலையில் சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் அதனை திருப்பி கொடுத்து அதற்கு பதிலாக நல்ல பொருட்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மக்களுக்காக நல்ல முறையில் நல்ல பொருட்களை வழங்கி வருகின்றோம் நீலகிரி மாவட்டம் சமத்துவம் மிக்க அனைத்து சமுதாயமும் இணைந்து இருக்கக்கூடிய மாவட்டமாக விளங்குகிறது என்று பேசினார் பின்னர் அமைச்சர் தன் கண்ணை பரிசோதனை செய்து கண் பரிசோதனை செய்தவர்களை பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில்ரெட் கிராஸ் துணை சேர்மன் கோபால், கிருஷ்ணமூர்த்தி, கொலுசு, ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் மற்றும் 120 நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டனர்