வேலூர் தொழ்ற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வேலூர் அக்டோபர் 30
வேலூர் மாவட்டம் இந்திய அரசின் எக்கு(steel) துறையின் தேசிய இயக்குநர் ஜி.ராமசாமி அவர்களால் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு.அச்சம்தவிர்அறக்கட்டளை யும் சத்ரிய பிலிம் டெக்னாலாஜியும் இணைந்து நடத்திய விருதுகள் வழங்கும் விழாவில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆற்றிய பணிகளை பாராட்டி இந்திய அரசின் எக்கு(steel) துறையின் தேசிய இயக்குநர் ஜி.ராமசாமி அவர்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.வேலூரில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு முன்னதாக அறக்கட்டளையின் இயக்குநர் ஜெயஶ்ரீ வரவேற்று பேசினார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராம்மூர்த்தி, வேலூர் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வை.நடனசிகாமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராட்டினர்.
இந்த விழாவில் வேலூர், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளையின் அவைத்தலைவரும், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் ஆற்றிவரும் கல்வி மற்றும் சமூக சேவைகளை பாராட்டி இந்திய அரசின் எக்கு(steel) துறையின் தேசிய இயக்குநர் ஜி.ராமசாமி அவர்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்