தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து பணிமனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
![]()
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடுகள் பயோ மெட்ரிக் முறையில் இருப்பதை பார்வையிட்டார். வண்டி எண், தேதி, எத்தனை லிட்டர் டீசல் போட்டது என்ற டீசல் போடுவதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பேருந்து பழுது செய்வதை பார்வையிட்டு பழுது நீக்கும்போது செயல்முறைகளை கேட்டறிந்தார். மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து பேருந்துக்குள் மழைநீர் வருவதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் பேருந்துகளை ஆய்வு செய்து புதிய முறைப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பேருந்து இருக்கைகள், என்ஜின், ஆபத்து நேரத்தில் வழி ஆகியவற்றை பார்த்து கேட்டறிந்தார். மேலும், பேருந்துக்குள் எவ்வளவு லக்கேஜ் வைப்பது, எத்தனை சீட் இருக்கிறது, எத்தனை பேர் செல்லலாம் என்று ஆய்வு செய்தார். பணிமனையில் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்குவதால் அதை ஊழியர்கள் சரி செய்ய கோரிக்கை வைத்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்திற்கு சுமார் 10 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர் பகுதிக்கு அருகில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்துள்ளோம். திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
ஆய்வில், தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து மண்டல மேலாளர் ஜி.பழளியப்பர், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

