மறைந்த அண்ணன் சி. டி. தண்டபாணி எனும் ஒப்பற்ற தலைவரின் 21 ம் ஆண்டு நினைவு நாள்
மறைந்த அண்ணன் சி. டி. தண்டபாணி எனும் ஒப்பற்ற தலைவரின் 21 ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரை போற்றி வணங்கி நினைவு கூர்வோம்
திமுக மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான சி.டி.தண்டபாணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினாராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். தமிழக சட்டசபையில் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக 1996 ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை பதவி வகித்தார். தமிழக கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர்கள் கியானி ஜெயில்சிங். பிரணாப் முகர்ஜி. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டவர். நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று தனி தீர்மானம் கொண்டு வந்து பாராட்டப்பட்டவர்.
சி.டி.தண்டபாணி அவர்களின் கழக பணிகள் தொண்டர்கள் மனதை விட்டு என்றும் அகலாது. சி.டி.தண்டபாணி அவர்களின் நினைவு நாளான இன்று மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாவட்ட கழக துணைச்செயலாளர் கல்பனா செந்தில், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாநகர் மாவட்ட பிரதிநிதி இலா.தேவசீலன் மற்றும் கழக நிர்வாகிகளும் அவரை போற்றி வணங்கி நினைவு கூர்ந்தார்.