ஃப்ளெக்ஸி ஃப்யூவல் ஸ்ட்ராங் ஹைபிரிட் வாகன தொழிநுட்ப பைலட் திட்டம் டொயோட்டா நிறுவனம் அறிமுகம்
பாண்டிச்சேரி:
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் ஃப்ளெக்ஸி ஃப்யூவல் ஸ்ட்ராங் ஹைபிரிட் வாகன தொழில்நுட்ப (Flexi-Fuel Strong Hybrid Electric Vehicle Technology) என்ற பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்நிகழ்ச் சி மாண்புமிகு திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், இதர முக்கிய அரசுப் பிரமுகர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முன்முயற்சியானது, எத்தனால் ஒரு முக்கியமான உள்நாட்டு, கார்பன் நியூட்ரல் எரிசக்தி பாதையாக, இந்தியாவிற்கு உண்மையான தன்னம்பிக்கையை அடைய உதவும் மேம்பட்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனத் தொழில்நுட்பத்துடன், எத்தனால் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் முதல் படியைக் குறிக்கிறது.மேலும் 2070க்குள் கார்பன் நெட்-ஜீரோவின் தேசிய இலக்கை அடைய பங்குஅளிப்பதை நோக்கமாக கொன்டுள்ளது…