திண்டல் முருகன் கோவிலில் “ராஜகோபுரம்” அமைக்க அமைச்சர் ஆய்வு..!
ஈரோடு அக்டோபர் 27
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் திண்டல் முருகன் கோவில் முகப்பில் ராஜ கோபுரம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு மாநகரில் புறநகர் பகுதியில் பெருந்துறை ரோட்டில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் , மலையில் அமையப் பெற்றுள்ளது இதன் முகப்பு தோற்றம் ராஜகோபுரம் அமைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் திண்டல் முருகன் கோவில் அறங்காவலர் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ராஜகோபுரம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் சு முத்துசாமி, மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர் குழு பொறுப்பாளர்கள் மற்றும் திண்டல் முருகன் கோவில் பக்தர்கள் ராஜகோபுரம் அமைவிடத்தை ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் ,தி.மு.க ., மாநகர, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.