வெளிநாட்டில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார் ஜெ: அழகிரி சொல்கிறார்
சென்னை, அக்- 26
வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு
ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. தான்
எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்,