`மீண்டும் கனிமவள கொள்ளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தினசரி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது 

Loading

மீண்டும் கனிமவள கொள்ளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தினசரி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது
அளவுக்கு அதிகமாக எடை ஏற்றி செல்வதால் செங்கோட்டை நகராட்சி  குற்றாலம் மேலகரம் பேரூராட்சி மற்றும் அதன் சாலையோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் தென்காசி நகராட்சி மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் சுரண்டை நகராட்சி மற்றும் கடையநல்லூர் நகராட்சிக்கான தாமிரபரணி குடிநீர் திட்டமும் அளவுக்கு அதிகமான கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றுவதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசுபடுகிறது.
வாகன போக்குவரத்து சட்டத்தில் அடிக்கடி மாற்றம் செய்து சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் சட்டம் இயற்றினாலும் அதை அதிகாரிகள் தங்கள் சுயநலத்திற்காக கையூட்டு பெற தான் அச்சட்டம் பயன்படுகிறது. அதிக கனரக வாகனங்கள் சாலையில் செல்வதால் பொதுமக்களும் குழந்தைகளும் அலுவலகம் செல்வோரும் சாலையில் மிகவும் அச்சத்தோடு பயணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை நிலவி வருகின்றது
கேரளா மாநிலத்தில் இரவு நேரத்திலும் பள்ளிக்கூட நேரத்திலும் அவர்கள் சாலையில் கனரக வாகனங்களை சாலையில் அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்திலோ இரவு நேரத்திலும் உச்ச நேரத்திலும் பள்ளிக்கூட நேரத்திலோ மிகவும் அதிக பாரம் ஏற்றி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்து வருகிறது..
தமிழக கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் கிடைக்காது என்ற அவல நிலை ஏற்படும். கேரள மாநிலத்தில் நம்மை விட அதிக அளவில் கனிம வளங்கள் இருந்தும் கூட அவர்கள் அதை சுரண்டுவதற்கு அனுமதிப்பதில்லை.. மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதால் சட்டத்தை மதித்து கனிம வளங்களை பாதுகாக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அதற்கு எதிர்மாறான நிலை நிலவுகிறது
தற்போது தினசரி 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் நமது கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் திறக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை விரைவில் இருமடங்காக உயர வாய்ப்புள்ளது.
அனைவரும் இந்த பதிவை அரசின் காதுகளுக்கு எட்டும் வரைக்கும் அனைத்து whatsapp குழுவிலும் பகிர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
விரைவில் கனிமவள பாதுகாப்பு இயக்கம் சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற இருக்கிறது. அனைவரும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கனிமவள பாதுகாப்பு இயக்க குழுவிற்கு தங்களது முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *