இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் தடையின்றி கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள்.

மிதுனம்

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விரயம் ஏற்படும்.

கடகம்

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழில் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி பெருகும்.

சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.

கன்னி

நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள்.

துலாம்

உங்கள் கையில் பணம் தாராளமாக நடமாடும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் நாள் இது. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். குடும்ப நலனுக்காக பெண்கள் சேமிப்பைத் தருவார்கள்.

தனுசு

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மகரம்

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். கூட இருந்து குழி பறிக்கும் மயற்சியில் இறங்குவார்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கப் பதவிகள் தேடி வரும்.

மீனம்

நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். கடன் வாங்காதீர்கள்.

0Shares

Leave a Reply