தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
புதுவை என்ஜினீயரிங் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பல்கலைக்கழகதின் முதல் துணைவேந்தராக மோகனும், பதிவாளராக சிவராஜிம் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில் பதிவாளர் சிவராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் நிதி மோசடி செய்தாகவும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பதிவாளர் சிவராஜை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக துணைவேந்தர் மோகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளரான சிவராஜ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடு மற்றும் நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளார். அவர் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பதிவாளர் சிவராஜ் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அவர் உரிய அனுமதியின்றி புதுச்சேரியை விட்டு வெளியே செல்லக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது