கவர்ச்சி நடனத்திற்கு நிபந்தனை விதித்த நடிகை சன்னி லியோன்

Loading

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

நடிகை சன்னிலியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப்பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்று கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply