திருவள்ளூரில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நினைவுத் தூணுக்கு எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து, 21 குண்டுகள் முழங்க 3 முறை வானத்தை நோக்கி சுட்டு வீரவணக்கம் செலுத்தினர்
திருவள்ளூர் அக் 22 :
அக்டோபர் 21-ம் நாளை ஆண்டு தோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 264 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தற்காலிக ஆயுதப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி.பா.சிபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் ஜேசுதாஸ், மீனாட்சி டிஎஸ்பி விவேகானந்த சுக்லா, அனுமந்தன், இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, ஜோசப் செல்வகுமார், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.