ஊத்தங்கரையில் நாட்டுப்புற கலைஞர்கள் மண்டல மாநாடு
ஊத்தக்கரையில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நல சங்கத்தின் 12 வது மண்டல மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். நாட்டுப்புற கலைஞர்கள் முனிராஜ், பழனியப்பன், கண்ணன், வேடியப்பன் குப்புசாமி மாநிலச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக சங்கரதாஸ் சுவாமி மற்றும் குணசேகரன் படத்திறப்பு விழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நல சங்க, மாநிலத் தலைவர் சத்தியராஜ், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சந்திரசேகரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாநட்டில் நாடகம், தெருக்கூத்து கலைஞர்கள், நையாண்டிமேளம், கரகாட்டம், தப்பாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம்,பம்பை , உடுக்கை கலைஞர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வேடங்களில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை மாநாட்டில் வாசித்தனர்.
இதில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர்செல்வம், தெற்க்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், எம்ஜிஆர் கண்ணன் உள்பட 700 க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்.16யுடிபி.1.2. ஊத்தங்கரையில் நடைப்பெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் மண்டல மாநாட்டில் கலந்துக்கொண்டணர்கள்.