மம்முட்டியுடன் இணைந்த ஜோதிகா

Loading

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா. இவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார்.

இந்நிலையில் ஜோதிகாவின் பிறந்த நாளான 18-ந் தேதி படக்குழு டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு ‘காதல்’ என்று பெயர் வைத்துள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

0Shares

Leave a Reply