விஜய் பட இயக்குனருடன் இணைந்த விமல்

Loading

2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத். அதன்பின்னர் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல படங்களை இயக்கினார். தற்போது விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை கான்ஃபிடன்ட் பிலிம் கேப் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் விமலுக்கு ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றனர்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தன்னுடைய சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாகவும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது. இந்த படத்தை பொங்கல் திருநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *