மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி பல்வேறு கோரிக்கைகளை செய்தியாளர்கள் மூலமாக தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி பல்வேறு கோரிக்கைகளை செய்தியாளர்கள் மூலமாக தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடீஸ் வீதி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் அமைப்பின் மாநில தலைவர் பொன்னுசாமி கூறும் போது வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதி மதசார்பற்ற ஜனதா தளத்தின் அகில இந்திய பொது குழு, பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இதில் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தலைமை ஏற்று பொதுக்குழுவில் கலந்து கொள்கிறார் எனவும், இந்த கூட்டத்தில் அகில இந்திய பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், வருகின்ற நவம்பர் மாதம் 12ஆம் தேதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது.
அதில் அனைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், பங்கு கொள்ள வேண்டும் எனவும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கொல்லிமலை தடுப்பணை, ஜேடர்பாளையம் தடுப்பணைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக பின்னால் வந்த திராவிட இயக்க கட்சிகள் அந்த திட்டங்களை முடக்கி வைத்துள்ளது.
இந்த இரு அணைகளின் திட்டங்களையும் செயல்படுத்தி நீரை திருப்பி விடாமல் 320 கிராமங்களுக்கு வருடம் தோறும் 365 நாளும் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கிடைக்க வழி வகை செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து நெசவு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொருளாளர் சந்திரமௌலி, மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் கனகராஜ், மாநகர செயலாளர் சாரமேடு செல்வராஜ், என பலரும் கலந்து கொண்டனர்.