வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக நறுவீ ஜீ.வி சம்பத்து தேர்வு.

Loading

வேலூர்
 வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி வி சம்பத் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வருடந்திரபொதுக்குழுகூட்டம்வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கிருஷ்ணன். தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை சங்கச் செயலாளர் ஸ்ரீதரன்.வரவேற்றார்.இந்தபொதுக்குழு கூட்டத்தில் வரும் மூன்று ஆண்டுகளுக்கானபுதியநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி சம்பத், துணைத் தலைவர்களாக விஜயகுமாரி, கிருஷ்ணன், குமார், தினேஷ், சங்கர்,கணேஷ்,கங்காதரன், வினோத் குமார், செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக சாய் விக்னேஷ், உள்ளிட்ட பதவிகளுக்கு பல்வேறு நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதியதலைவராகதேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஜி.வி சம்பத், சர்வதேச மேலாண்மை துறையில் பட்டம் பெற்றவர் மேலும் சங்கத்தின் துணைத் தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார். பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *