துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 17 போலீசார் மீது  நடவடிக்கை :    நீதிபதிகள் ஆணையம் பரிந்துரை  தமிழக சட்டசபைில் அறிக்கை தாக்கல் 

Loading

சென்னை ,

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 17 போலீஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ள அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

தமிழக சட்டசபையில் துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது, அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு ,

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை.முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லைதுப்பாக்கி சூடு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய படிப்படியான அணுகுமுறையை இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கையாளப்படவில்லைதப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்திருப்பது, அவர்கள் பின்மண்டையில் குண்டு புகுந்து முன்பகுதியில் வெளியேறியதன் மூலம் தெரியவந்தது.

இறந்தவர்கள் அனைவருக்கும் இடுப்புக்கு மேல் தான் காயம்.காவலர்களுக்குள் கூட்டு ஒருங்கிணைப்பு இல்லை.டி ஐ ஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.க்கு கூட தெரியவில்லைஐ ஜி மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே இருந்தும்டி ஐ ஜி தானாகவே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் அதற்கேற்ற உத்திகளை மேற்கொள்ளாதது ஐ ஜி.யின் தவறுபோரட்டக்காரர்களால் ஏற்படும் தீமையை விட துப்பாக்கி சூட்டால் நடத்தப்பட்ட தீமையே அதிகம் துப்பாக்கி சூடு மிகவும் கொடுமையானது என்று இந்த ஆணையம் கருதுகிறதுதுப்பாக்கி சூட்டால் இறந்தவர்கள் குறித்து ஆங்காங்கே நின்று சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.பி. துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

சுடலைக்கண்ணு  என்ற துப்பாக்கிச்சுடும்  காவலர், அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு 17 ரவுண்டுகள் சுட்டிருக்கிறார்.உணர்ச்சிவசப்பட்டு எஸ் பி தனது பாதுகாவலரின் துப்பாக்கியையே வாங்கி 9 ரவுண்ட் சுட்டு உள்ளார்இந்த காரணங்களால் காவல்துறையினர்  வரம்பு மீறி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவு.

தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் தெரிவிக்க வில்லைஐ ஜி சைலேஷ் குமார் யாதவ்,டி ஐ ஜி கபில்குமார் சரத்கர், எஸ் பி மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர் கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி,  ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்ளிட்ட 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க  ஆணையம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் செயலின்மை அக்கறையின்மை மற்றும் அதிகாரியுடன் இணக்கமின்மையே இந்த சம்பவம் காண்பிக்கிறது. மாவட்ட ஆட்சியர் கடமையிலிருந்து தவறி விட்டார். சாத்தியங்கள் மற்றும் சான்றுகளை ஆராய்ந்ததில் அவர் தன் கடமையிலிருந்து தவறியதும்  ஆரம்பம் முதல் அவரின் அலட்சிய நடவடிக்கைகள் தான் போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைய அடித்தளமாக அமைந்துள்ளது என்று ஆணையம் கருதுவதாகவும், இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க  முகாந்திரம் உள்ளதாக பரிந்துரை செய்துள்ளது.

துணை வட்டாட்சியர்கள் சேகர், சந்திரன், கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முன்பு சிறப்பு நிர்வாக நடுவரின் உத்தரவு பெற்றதாக ஒரு போலியான நிகழ்வை உண்டு பண்ணி அதற்கு இணக்கமுள்ள துணை வட்டாட்சியர்களை புகுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதன் காரணமாக மூன்று சிறப்பு நடுவர்கள் மீது துறை ரீதியாகவும் வேறு தகுந்த நடவடிக்கையும் எடுக்க ஆணையம் பரிந்துரைக்கிறது. பலர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து செயலிழந்து வலி வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். சிலருடைய துன்பம் உயிரிழப்பை விட கொடியது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்து போனவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் , அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அரசு பணி வழங்கியதை ஆணையம் பாராட்டி உள்ளது. உயிரிழந்தவர்கள்  குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமாகவும், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது..இந்த அறிக்கை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு இதை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *