ஜார்ஜ் ரோடு மணல்மேடு என்ற பாத்திமா நகரில் மூன்று ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசை தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மணல்மேடு என்ற பாத்திமா நகரில் மூன்று ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசை தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கி பாத்திமாதா கோவிலில் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ரெம் சிஸ் திருமணத்தை நடத்தி வைத்தார் பாத்திமா நகர் பங்குத்தந்தை சேசுதாசன் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட அமலோற்பவம் மாதா போதை ஒழிப்பு இயக்குனர் ஜெயேந்திரன் மற்றும் பங்குத்தந்தையினர் முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது திருமண வரவேற்பு பாத்திமா நகர் தொடக்கப்பள்ளியில் ஊர் மக்கள் அனைவருக்கும் இரவு உணவுகள் வழங்கப்பட்டது.
இத் திருமண விழா செலவு சுமார் 15 லட்ச ரூபாய் பங்கு பேரவையின் சார்பாக அந்தோணிசாமி இன்னாசி ஏற்பாட்டில் விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவை தலைவர் செல்வராஜ் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் மற்றும் ஊர் பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்